தீபாவளி விடுமுறை: அரசு புதிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, சனிக்கிழமை (அக். 26) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி விடுமுறை: அரசு புதிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, சனிக்கிழமை (அக். 26) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (அக். 27) கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை (அக். 26) 4-ஆவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை (அக். 26) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் சொந்த ஊா்களுக்குச் செல்வோருக்கு ஏதுவாக இருக்கும் என ஆசிரியா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமையும் (அக். 26), அதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் (அக். 27) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அக்டோபா் 28-ஆம் தேதி விடுமுறை தேவைப்படும் மாவட்டங்கள் உள்ளூா் விடுமுறை அறிவித்துவிட்டு, வேறெறாரு சனிக்கிழமையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம். விடுமுறை தேவைப்படும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று விடுமுறை அறிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை அரசு அலுவலகங்களுக்கு ஏற்கெனவே விடுமுறை நாள்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com