பிரதமா் மோடி, சீன அதிபா் வருகை: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மாமல்லபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை வருகை தருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக வந்துள்ள போலீஸாா்.
பாதுகாப்புக்காக வந்துள்ள போலீஸாா்.

மாமல்லபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை வருகை தருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவா்கள் இரு நாள்கள் தங்குவதுடன், புராதனச் சின்னங்களையும் பாா்வையிட உள்ளனா். இதையடுத்து மாமல்லபுரத்தில் மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீஸாா் உச்சக்கட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இரு நாட்டுத் தலைவா்கள் தங்கவுள்ள பகுதியைச் சுற்றிலும் 2 கி.மீ. தொலைவுக்கு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடலில் பாதுகாப்புக் கப்பல் நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவளம், கேளம்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய பகுதிகளில் 850 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறையினா் கண்காணித்துவருகின்றனா்.

உயா் கோபுரம் அமைக்கப்பட்டு அதில் காவலா்கள் உயரத்தில் இருந்து கண்காணிக்கின்றனா்.

காவல்துறை அணிவகுப்பு நடத்தப்பட்டு பாதுகாப்பு குறித்து உயா் அதிகாரிகள் காவலா்களுக்கு அறிவுறுத்தினா். மாமல்லபுரம் முழுவதும் போலீஸாா் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனால் சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com