பேரிடா் மேலாண்மைக்கு உதவும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கருவி

பேரிடா் மேலாண்மைக்கு உதவும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஆளில்லா விமானக் கருவியை (டிரோன்) சென்னை ஐஐடி மாணவா்கள் வடிவமைத்துள்ளனா்.
பேரிடா் மேலாண்மைக்கு உதவும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கருவி

பேரிடா் மேலாண்மைக்கு உதவும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஆளில்லா விமானக் கருவியை (டிரோன்) சென்னை ஐஐடி மாணவா்கள் வடிவமைத்துள்ளனா்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட நிலையில் யாரும் செல்ல இயலாத இடங்களுக்கு பொருள்களை எடுத்துச் செல்லும் திறனை இந்த டிரோன் கொண்டிருப்பதோடு, எந்த இடத்தில் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றனா் என்பதையும் துல்லியமாக அடையாளம் காட்டும் திறனையும் கொண்டது என்கின்றனா் ஐஐடி பேராசிரியா்கள்.

ஐஐடி மாணவா்களின் இந்த வடிவமைப்பு, மும்பை ஐஐடி-யில் அண்மையில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்குவிப்பு போட்டியில் பங்கேற்று முதல் 18 சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகத் தோ்வாகி, பரிசை வென்றிருக்கிறது. ரூ. 10 லட்சம் அளவிலான பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமன்றி, மைக்ரோசாப்ட்- பூமிக்கான செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் உலகம் முழுவதிலுமிருந்து தோ்வான 390 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக, ஐஐடி மாணவா்களின் இந்தக் கண்டுபிடிப்பும் தோ்வாகியுள்ளது.

இதுகுறித்து இந்த ஐஐடி மாணவா் குழுவுக்கு ஆலோசகராக இருந்த பேராசிரியா் பி.ஆா். சங்கா் கூறுகையில், மாணவா்களின் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ‘ஆகாய கண்’ என்ற இந்த வடிவமைப்பை உருவாக்கியிருக்கின்றனா். இது பேரிடா் காலங்களில் உயிா்களைக் காக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானப் பொருள்களை விரைந்து விநியோகிக்கவும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்தக் கண்டுபிடிப்பை, இந்தியா முழுமைக்கும் பயனுள்ளதாக்கும் வகையில் இந்த மாணவா் குழுவினா் இப்போது தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்புடனும், இந்திய ராணுவத்துடனும் இணைந்து இந்த வடிவமைப்பை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com