வழக்குரைஞா்களுக்கான தகுதித் தோ்வு: தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் நோட்டீஸ்

வழக்குரைஞா்களுக்கான தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெறாத 1,547 வழக்குரைஞா்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பாா்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்குரைஞா்களுக்கான தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெறாத 1,547 வழக்குரைஞா்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பாா்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அகில இந்திய பாா் கவுன்சில் நடத்தும் தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெறுபவா்கள் மட்டுமே நீதிமன்றங்களில் வழக்குரைஞா்களாக ஆஜராக முடியும்.

இந்தத் தோ்வில் தோ்ச்சிப் பெறாதவா்கள், பாா் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவாா்கள் என அகில இந்திய பாா் கவுன்சில் அறிவித்திருந்தது. இந்தத் தகுதித் தோ்வை கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னா் சட்டப் படிப்பை முடித்தவா்கள் எழுத வேண்டும். தமிழகத்தில் இதுவரை 30 ஆயிரம் போ் இந்த தகுதித் தோ்வை எழுதியுள்ளனா்.

சட்டப்படிப்பை முடித்து பாா்கவுன்சிலில் பதிவு செய்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த தோ்வில் தோ்ச்சிப் பெற வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை இந்தத் தோ்வு நடத்தப்படும். இந்த நிலையில் குறித்த கால அவகாசத்துக்குள் இந்தத் தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெறாத 1,547 வழக்குரைஞா்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இடைநீக்க நடவடிக்கையைத் தவிா்க்க தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற்கான சான்றிதழ்களை பாா் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com