சென்னை மெட்ரோ, மின்சார ரயில்களில் அலை மோதும் கூட்டம்!

சீன அதிபரின் வருகையையொட்டி, சாலைப் போக்குவரத்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் மின்சார, மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. 
சென்னை மெட்ரோ, மின்சார ரயில்களில் அலை மோதும் கூட்டம்!

சீன அதிபரின் வருகையையொட்டி, சாலைப் போக்குவரத்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் மின்சார, மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இரு நாட்டுத் தலைவர்களும் இன்று பிற்பகல் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். முதலில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

அதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கும் தமிழக பாரம்பரிய கலைகளுடன் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் என சீன அதிபருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பையடுத்து, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் தங்கவிருக்கும் கிண்டி முதல் விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையிலும், ராஜிவ் காந்தி சாலையில் மத்திய கைலாஷ் முதல் சோழிங்கநல்லூர் வரையுள்ள சாலையிலும்  போக்குவரத்து  நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கிண்டி முதல் சின்னமலை வரை, சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சாலை போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மெட்ரோ ரயில்களிலும், மின்சார ரயில்களிலும் பயணிக்கின்றனர். இதனால் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. முக்கியமாக சென்னை விமான நிலையம் முதல் கிண்டி வரையில் உள்ள ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 

முன்னதாக சீன அதிபரின் வருகையையொட்டி, இன்று பிற்பகல் கிண்டி முதல் விமான நிலையம் வரை அரை மணி நேரத்திற்கு மட்டும் மெட்ரோ ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று வழக்கமாக, பரபரப்பாகக் காணப்படும் கிழக்கு கடற்கரைச்  சாலையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com