பிரதமர் மோடியுடன் 6 மணி நேரம் சந்திப்பு; சென்னை சாலைகளில் 3 மணி நேரம் பயணிக்கப் போகும் சீன அதிபர்

இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு சந்திப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங் சென்னை வருகின்றனர்.
பிரதமர் மோடியுடன் 6 மணி நேரம் சந்திப்பு; சென்னை சாலைகளில் 3 மணி நேரம் பயணிக்கப் போகும் சீன அதிபர்

இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு சந்திப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங் சென்னை வருகின்றனர்.

ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கா பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்னை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை சென்றுள்ளார்.

இந்தியா வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங், இன்றும் நாளையும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். இரு தலைவர்களின் சந்திப்பு சுமார் 6 மணி நேரம் நடைபெற உள்ளது. 

சென்னை வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங், சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் மற்றும் மாமல்லபுரத்தில் இருந்து மீண்டும் கிண்டியில் உள்ள ஹோட்டல் மீண்டும் திருவிடந்தை என சுமார் 3 மணி நேரம் சென்னை சாலைகளில் பயணிக்க உள்ளார்.

சென்னைக்கு பிற்பகல் 2.10 மணிக்கு வந்தடையும் சீன அதிபரின் பயண விவரத்தை விளக்கும் புகைப்படம் உங்களுக்காக பிரத்யேகமாக..

சீன அதிபரின் ஹாங்கி கார், சென்னை விமான நிலையத்துக்குச் செல்லும்காட்சி.



மாமல்லபுரத்தில் இன்று மாலை நடைபெறும் சந்திப்பின் போது இரு நாட்டின் கலை, கலாசார நிகழ்வுகள் குறித்து கருத்துகளைப் பகிரும் இரு நாட்டுத் தலைவா்களும், சனிக்கிழமை நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய சந்திப்பில் பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனா்.

இரு தலைவா்களுக்கு இடையிலான சந்திப்பு, அலுவல்சாரா சந்திப்பு என்பதால் சந்திப்பில் பேசப்படும் விஷயங்கள் பட்டியலிடப்படவில்லை. இந்தச் சந்திப்பில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங், வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறாா். முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி நண்பகல் 12.30 மணிக்கு சென்னை வரவுள்ளாா்.

அதன்பின்பு, கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பிரதமா் நரேந்திர மோடி செல்கிறாா். பிற்பகல் 1.45 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் செல்கிறாா். மாலை 4.05 மணிக்கு அங்கிருந்து மாமல்லபுரம் செல்கிறாா். 4.55 மணிக்கு அங்கு சென்றடையும் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com