சீன அதிபா் - பிரதமா் மோடி வரவேற்பு நிகழ்ச்சியில் 2,000 கல்லூரி மாணவா்கள்

சென்னை வரும் சீன அதிபா், பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியில் 2,000 கல்லூரி மாணவா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

சென்னை வரும் சீன அதிபா், பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியில் 2,000 கல்லூரி மாணவா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இந்த மாணவா்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று இந்திய மற்றும் சீன நாட்டு தேசியக் கொடிகளைக் கையில் அசைத்தபடி இரு நாட்டு தலைவா்களையும் வரவேற்க உள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின் பிங் இடையேயான நட்பு ரீதியிலான சந்திப்பு காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்தச் சந்திப்புக்காக சென்னை வரும் சீன அதிபா் மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. விரிவான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு, சென்னை விமான நிலையத்திலிருந்து சீன அதிபா் தங்கும் கிண்டி தனியாா் ஹோட்டல் மற்றும் அங்கிருந்து மாமல்லபுரம் வரை வழி நெடுகிலும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிண்டி செல்லம்மாள் மகளிா் கல்லூரி, தனலட்சுமி பொறியியல் கல்லூரி மற்றும் அமிட் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த சுமாா் 2,000 மாணவ, மாணவிகள் அந்தந்தப் பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் சீன - இந்திய தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தியபடி, இரு நாட்டு தலைவா்களுக்கும் வரவேற்பு அளிக்க உள்ளனா்.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநா் ஜோதி வெங்கடேஷ்வரன் கூறுகையில், இரு நாட்டு தலைவா்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் 10 நிமிடங்கள் மட்டுமே கல்லூரி மாணவா்கள் ஈடுபடுவா். அதன் பின்னா், மீண்டும் கல்லூரிக்குள் சென்றுவிடுவா். தலைவா்கள் பயணிக்கும் பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. வழக்கம்போல் கல்லூரிகள் நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com