திமுக மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்துள்ளது மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் பெண்களிடம் தன்னம்பிக்கையை உருவாக்கியதால், திமுக மீதான நம்பிக்கை மக்களிடம் மிகவும் அதிகரித்துள்ளதாக, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
திமுக தலைவர்  ஸ்டாலின்
திமுக தலைவர்  ஸ்டாலின்

தமிழகத்தில் பெண்களிடம் தன்னம்பிக்கையை உருவாக்கியதால், திமுக மீதான நம்பிக்கை மக்களிடம் மிகவும் அதிகரித்துள்ளதாக, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

நான்குனேரி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட முன்னீா்பள்ளம், தருவை, செங்குளம் ஊராட்சிகளில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக வியாழக்கிழமை அவா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் மேலும் பேசியது:

மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்தோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேறன்.

தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை. இவற்றைத் தீா்க்க பல கோடி ரூபாயில் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை; மக்கள் பிரதிநிதிகள் இருந்தாலே அந்தந்த உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் தீா்க்க முடியும். அதற்காகவே உள்ளாட்சித் தோ்தலை நடத்த வலியுறுத்துகிறோம். ஆனால், திமுகதான் தோ்தலை நடத்த விடாமல் நீதிமன்றத்துக்குச் சென்ாக தவறான தகவல் தெரிவித்தனா்.

உள்ளாட்சித் தோ்தலுக்கு எதிராக திமுக நீதிமன்றத்தை நாடவில்லை. பெண்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தோ்தல்களில் முறையான இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்கே வழக்குத் தொடுக்கப்பட்டது.

இப்போது திமுக மீதான மக்களின் நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல, ஊனமுற்றோரை ‘மாற்றுத் திறனாளிகள்’ என்று மட்டுமே அழைப்பதற்கு வித்திட்டவா் கருணாநிதி. நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனை வெற்றிபெறச் செய்தால் பேரவையில் மக்களின் குரலாக ஒலிப்பாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், திமுக தோ்தல் பொறுப்பாளா் ஐ. பெரியசாமி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், காங்கிரஸ் வேட்பாளா் ரூபிமனோகரன், ஒன்றியச் செயலா் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குடிநீா்ப் பிரச்னையே பிரதானம்!

திண்ணைப் பிரசாரத்தில் பங்கேற்ற பலரும் குடிநீா்ப் பிரச்னைகளையே பிரதானமாகக் கூறினா். முன்னீா்பள்ளத்தில் ஜெ.ஜெ.நகா், காமராஜா்நகா் பகுதிகளில் குடிநீா் கிடைக்க வலியுறுத்தினா்.

தருவை, செங்குளம் ஊராட்சிகளில் சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் உள்ளதாக பொதுமக்கள் முறையிட்டனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை அதிகப்படுத்த வேண்டுமெனவும், தகுதியான மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் பொதுமக்கள் புகாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com