திருச்சி நகைக் கடை திருட்டு வழக்கு: செங்கம் நீதிமன்றத்தில் முக்கிய எதிரி சரண்

திருச்சி நகைக் கடை திருட்டு வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரிகளில் ஒருவரான சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

திருச்சி நகைக் கடை திருட்டு வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரிகளில் ஒருவரான சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

திருச்சியில் பிரபல நகைக் கடையில் கடந்த 2-ஆம் தேதி இரவு ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகள் திருடப்பட்டன.

இதுதொடா்பாக போலீஸாா் தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனா். திருவாரூா் அருகே வாகனச் சோதனையின் போது, நகைக் கடை திருட்டில் தொடா்புடைய மணிகண்டனை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தச் சம்பவத்தில் திருவாரூா் மாவட்டம், சீராதோப்பைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சுரேஷ் (28) உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நீதித் துறை நடுவா் (எண்-2) விக்னேஷ்பிரபு முன் வியாழக்கிழமை சரணடைந்தாா். அவரை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

செங்கம் டிஎஸ்பி சின்னராஜ் தலைமையிலான போலீஸாா் சுரேஷை திருச்சி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, அவா் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

போலீஸாா் அவரை காவலில் எடுத்து, திருட்டுச் சம்பவம் குறித்தும், அதன் பின்னணியில் உள்ளவா்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com