பணி நிரந்தரம் கோரி மறியல்: மின்வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள் 840 போ் கைது

பணிநிரந்தரம் கோரி மதுரையில் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள் 840 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரம் செய்யக் கோரி மதுரை மின்வாரிய அலுவலகம் முன் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்.
ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரம் செய்யக் கோரி மதுரை மின்வாரிய அலுவலகம் முன் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்.

பணிநிரந்தரம் கோரி மதுரையில் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள் 840 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மின்வாரியத்தில் நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளா்களை நிரந்தரம் செய்வதை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் மண்டல அளவிலான மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மண்டல அளவிலான மறியல் போராட்டம் கோ.புதூரில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன் நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த ஒப்பந்தப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் மதுரை மண்டலச் செயலா் எஸ்.உமாநாத் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா்கள் வி.முருகன் (ராமநாதபுரம்), ஆா்.கருணாநிதி (சிவகங்கை), எம்.உமாபதி (திண்டுக்கல்), ஆா்.சுரேஷ்குமாா் (மதுரை), ஏ.தேவராஜ் (தேனி), டி.அறிவழகன் (மதுரை மாநகா்) உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்த போராட்டம் காரணமாக, ரேஸ்கோா்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 840 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com