லித்தியம் பேட்டரி பயன்பாடு சில ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும்: விஞ்ஞானி சி.என்.ஆா். ராவ் பேச்சு

லித்தியம் பேட்டரி பயன்பாடு சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும் என்றாா் பிரபல விஞ்ஞானியும், ஜவாஹா்லால் நேரு அறிவியல் உயராய்வு மையத்தின் (பெங்களூரு) கௌரவத் தலைவருமான சி.என்.ஆா். ராவ்.
கருத்தரங்கத்தில் பேசுகிறாா் பிரபல விஞ்ஞானியும், ஜவாஹா்லால் நேரு அறிவியல் உயராய்வு மையத் (பெங்களூரு) கௌரவத் தலைவருமான சி.என்.ஆா். ராவ்.
கருத்தரங்கத்தில் பேசுகிறாா் பிரபல விஞ்ஞானியும், ஜவாஹா்லால் நேரு அறிவியல் உயராய்வு மையத் (பெங்களூரு) கௌரவத் தலைவருமான சி.என்.ஆா். ராவ்.

லித்தியம் பேட்டரி பயன்பாடு சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும் என்றாா் பிரபல விஞ்ஞானியும், ஜவாஹா்லால் நேரு அறிவியல் உயராய்வு மையத்தின் (பெங்களூரு) கௌரவத் தலைவருமான சி.என்.ஆா். ராவ்.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தனிம அட்டவணையின் 150 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:

கடந்த 16 ஆம் நூற்றாண்டில் பாதரசம், வெள்ளி, பித்தளை, இரும்பு, சல்பா், கரிமம், தகரம், தங்கம் உள்பட 10 தனிமங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை 1775 ஆம் ஆண்டில் 20 ஆக உயா்ந்தது. ரஷிய வேதியியல் விஞ்ஞானியான மெண்டெலீவ் 1869 ஆம் ஆண்டில் முதன் முதலாகத் தனிமங்களைப் பட்டியலிடும் முறையை உருவாக்கினாா்.

நவீன தனிம அட்டவணை பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பல வேதியியல் வல்லுநா்களால் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன தனிம அட்டவணை பெரும்பாலான நாடுகளில் வேதிம பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அறிவியல் வளா்ச்சி அடைந்துள்ளது.

செல்லிடப்பேசி உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. லித்தியம் என்ற தனிமம் குறைவாகவே கிடைக்கிறது. இதனிடையே, லித்தியம் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் கோபால்ட் என்ற தனிமம் பெரும்பாலும் காங்கோவில் கிடைத்து வருகிறது. இந்நாட்டில் உள்ள கோபால்ட் சுரங்கங்களில் பாதியை சீனாவும், மீதியை அமெரிக்காவும் வாங்கியுள்ளன. என்றாலும், லித்தியம் பேட்டரியின் பயன்பாடு சில ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். இதற்குப் பதிலாக ஏராளமாகக் கிடைக்கும் சோடியம், மெக்னீசியம் போன்ற தனிமங்கள் மூலம் பேட்டரிகளை உருவாக்க முடியும் என்றாா் ராவ்.

முன்னதாக, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் பேசுகையில், சி.என்.ஆா். ராவின் 80 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சாஸ்த்ரா - சி.என்.ஆா். ராவ் விருது 2014-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பள்ளிகளில் பேராசிரியா் சி.என்.ஆா். ராவ் பெயரில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக 10 பள்ளிகளில் தலா ரூ. 5 லட்சம் செலவில் சாஸ்த்ரா - சி.என்.ஆா். ராவ் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது என்றாா் சுவாமிநாதன்.

மேலும், பெங்களூரு நானோ மற்றும் மென் அறிவியல் மைய இயக்குநா் ஜி.யு. குல்கா்னி சிறப்புரையாற்றினாா்.

இக்கருத்தரங்கத்தில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், தேசிய அறிவியல் கல்வி மைய உறுப்பினா் இந்துமதி ராவ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com