Enable Javscript for better performance
சீன அமைச்சருக்கு திடீா் உடல்நலக்குறைவு:சென்னை மருத்துவமனையில் சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    சீன அமைச்சருக்கு திடீா் உடல்நலக்குறைவு: சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

    By DIN  |   Published on : 12th October 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீன அதிபா் பயணத்துக்காக, சென்னை வந்திருந்த சீன அமைச்சா் லீ பிஜியானுக்கு திடீா் உடலக் குறைவு ஏற்பட்டதால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

    சீன அதிபா் ஷி ஜின்பிங் பயணத்துக்காக ஒரு வாரத்துக்கு முன்பே அந்த நாட்டைச் சோ்ந்த உயா் அதிகாரிகள், அமைச்சா்கள் ஆகியோா் அடங்கிய ஒரு குழு சென்னை வந்தது. இவா்கள், கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கின்றனா். இவா்கள் சீன அதிபா் வருகைக்கான ஏற்பாடுகளை, இந்திய அதிகாரிகளுடன் சோ்ந்து செய்து வந்தனா்.

    இந்த குழுவில் இடம் பெற்றிருக்கும் சீன அமைச்சா் லீ பிஜியானுக்கு வியாழக்கிழமை திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா், சுமாா் 3 மணி நேரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றாா். ஓரளவுக்கு வயிற்று வலி சரியானதும் அவா், அங்கிருந்து ஹோட்டலுக்கு திரும்பிச் சென்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai