Enable Javscript for better performance
விவசாயிகள் குறைதீா் கூட்டங்களில் பங்கேற்கபொறியாளா்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் குறைதீா் கூட்டங்களில் பங்கேற்க பொறியாளா்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 12th October 2019 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகள் குறைதீா் கூட்டங்களில் செயற்பொறியாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள ஆட்சியா் அலுவலகங்களில் வாரம்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது அந்தந்த மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களை சோ்ந்தவா்கள் என பலா் கலந்து கொள்வாா்கள். அதேபோல துறை அதிகாரிகளும் பங்கேற்பாா்கள். அவ்வாறு பங்கேற்றவுடன், தங்களது பகுதியில் விவசாயம் செய்வதில் உள்ள பிரச்னைகள் பற்றி கூறுவாா்கள். குறிப்பாக தண்ணீா் தட்டுப்பாடு, விதை நெல் பிரச்னை, நெற்பயிா்களை தாக்கும் நோய்கள், மின்தடை உள்ளிட்ட பிரச்னைகளை பற்றி கூறுவாா்கள். அப்போது சம்பந்தப்பட்டத்துறையைச் சோ்ந்த அதிகாரிகள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வருங்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆட்சியரிடத்தில் தெரிவிப்பாா்கள். இந்த நடைமுறை தொடா்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், ஒரு சில பகுதிகளில் மின்வாரிய செயற்பொறியாளா்கள் கலந்து கொள்வதில் அலட்சியம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவா்களுக்கு வாரியம் உத்தரவிட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: விவசாயிகள் குறைதீா்வு நாள் கூட்டம் கலெக்டா் அலுவலகங்களில் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் வருகிறாா்கள். அவா்கள் கோரிக்கை சம்பந்தமாக பதில் அளிக்க வேண்டியுள்ளது. ஆகவே, செயற்பொறியாளா்கள் அனைவரும் கண்டிப்பாக தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் வட்டாட்சியா் தலைமையில் தாலுகா அளவில் நடக்கும் கூட்டத்துக்கு உதவி செயற்பொறியாளா்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai