சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை: அப்படி என்னதான் பேசியிருப்பார்கள் மோடியும், ஜின்பிங்கும்!

கோவளம் கடற்கரை அருகே அமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் பிரதமர் நரேந்திர மோடியும், இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை: அப்படி என்னதான் பேசியிருப்பார்கள் மோடியும், ஜின்பிங்கும்!


கோவளம்: கோவளம் கடற்கரை அருகே அமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் பிரதமர் நரேந்திர மோடியும், இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கண்ணாடி அறையில், வேறு எந்த அதிகாரிகளும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால், இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் எந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இரு தலைவர்களிடையே பேச்சுவார்த்தை முடிந்து, அறையில் இருந்து இரு தலைவர்களும் வெளியே வந்து சிறிது நேரம் நடந்தனர். 

தற்போது, கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் இந்தியா - சீன நாட்டு பிரதிநதிகளின் பேச்சுவார்த்தை மோடி - ஜின்பிங் தலைமையில் தற்போது தொடங்கியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், இந்திய தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோர் பங்கேற்றிருப்பதால், இந்தியா - சீனா இடையே வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்படும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com