வேட்டி, சட்டை மட்டுமல்ல அதுக்கும் மேல: தமிழில் ஜின்பிங்கை வரவேற்று மகிழ்ந்தார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான இரண்டாம் நாள் சந்திப்பு இன்று கோவளத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.
வேட்டி, சட்டை மட்டுமல்ல அதுக்கும் மேல: தமிழில் ஜின்பிங்கை வரவேற்று மகிழ்ந்தார் மோடி


கோவளம்: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான இரண்டாம் நாள் சந்திப்பு இன்று கோவளத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் ஒரு மணி நேரம் பல தரப்பட்ட விஷயங்கள் குறித்தும் பேசினர்.

பிறகு, இரு நாட்டுத்தலைவர்கள் தலைமையில் பிரநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்' என்று தமிழில் பேசி வரவேற்ற மோடி, உலகின் தொன்மையான மொழியான தமிழில் நான் பேசுகிறேன் என்று கூறி புன்னகைத்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் - சீனா இடையே வர்த்தக உறவு இருந்துள்ளது. உலகிலேயே இந்தியாவும் சீனாவும் பொருளாதார சக்திகளாக இருக்கின்றன. சீனாவின் யுஹான் உச்சி மாநாடு இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய வேகம் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. தற்போது நடந்து வரும் சென்னை சந்திப்பு புதிய சகாப்தத்தின் துவக்கமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

சென்னையில் மறக்க முடியாத ஒரு அனுபவம் கிடைத்தது: சீன அதிபர் ஷி ஜின்பிங்
அப்போது பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், தமிழகத்தின் விருந்தோம்பலைக் கண்டு நானும் எனது நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தோம். நீங்கள் கொடுத்த விருந்தோம்பலால் நானும் எனது நண்பர்களும் மிகச் சிறப்பாக உணர்ந்தோம். மறக்க முடியாத ஒரு அனுபவம் எனக்கும் எனது குழுவுக்கும் கிடைத்தது.

பிரதமர் மோடியுடன் இதயப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன், பிரதமர் மோடியும் நானும் நண்பர்கள் போல நேற்று பேசினோம். இரு தரப்பு விஷயங்களையும் ஆலோசனை செய்தோம் என்று ஜின்பிங் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com