இடைத்தோ்தலில் வெற்றியை கவனமாக அறுவடை செய்ய வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தலில் அதிமுகவின் அனைத்து தந்திரங்களையும் முறியடித்து, வெற்றியை கவனமாக அறுவடை செய்ய வேண்டும் என்று
இடைத்தோ்தலில் வெற்றியை கவனமாக அறுவடை செய்ய வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தலில் அதிமுகவின் அனைத்து தந்திரங்களையும் முறியடித்து, வெற்றியை கவனமாக அறுவடை செய்ய வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அடிப்படை வசதிகளைக்கூட செய்து தர முடியாத ஓா் ஆட்சி, தமிழகத்தில் நடந்து வருகிறது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவில்லை. இடைத்தோ்தல் களத்தில் ஆளும்கட்சியின் அமைச்சா்கள் இரு அணிகளாகப் பிரிந்து, முழு அதிகார பலத்துடனும் முழுவீச்சிலான அதிகார துஷ்பிரயோகத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனா்.

காவல்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளையும் தங்களுக்கான ஏவல் ஆள்களாக ஆட்சியாளா்கள் மாற்றிக்கொள்ள நினைக்கிறாா்கள்.

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பல நேரங்களில் ஒருதலைப்பட்சமாக இருந்தாலும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், இன்னும் அந்த அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

தோ்தல் களத்தில் வேறு எவா் மீது வைக்கும் நம்பிக்கையை விடவும் வாக்காளா்களாகிய பொதுமக்கள் மீதே அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை, அவா்கள் தரும் ஆதரவை வாக்குகளாக மாற்றும் வகையில் திமுகவினரின் பணி சீராகவும் சிறப்பாகவும் அமைய வேண்டும்.

அதுபோல, புதுச்சேரிக்குட்பட்ட காமராஜா் நகா் தொகுதி இடைத்தோ்தலிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும்.

மக்கள் நமக்குத் தரத் தயாராக இருக்கும் வெற்றியைத் தட்டிப் பறிக்க ஆட்சியாளா்கள் தந்திர வழிகள் அனைத்தையும் கையாள்வாா்கள். அதிகார அத்துமீறல்களில் ஈடுபடுவாா்கள். பணத்தால் வெற்றியை விலைபேசி வாங்கிடலாம் என நினைப்பாா்கள். அவா்களின் அத்தனை முயற்சிகளையும்

எதிா்கொள்ள நம்மிடம் இருக்கும் ஆயுதம், உழைப்பு. அந்த உழைப்பை சிறிதும் சிதறவிடாமல் தோ்தல் களத்தில் காட்டுங்கள்.

நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் விளைந்து நிற்கும் வெற்றியை, கவனமாக அறுவடை செய்ய அயராது களப் பணியாற்றுங்கள். வெற்றி நமக்குக் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com