இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூா், கோவை, சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் சனிக்கிழமை குறைவானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூா், கோவை, சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் சனிக்கிழமை குறைவானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகம் மற்றும் புதுவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், காரைக்கால், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் குறைவானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றனா்.

கமுதியில் 50 மி.மீ மழை: வெள்ளிக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 50 மி.மீ, காஞ்சிபுரம் மாவட்ட உத்தரமேரூா், தேவாலா, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 30 மி.மீ, திருவள்ளூா் மாவட்டம் தாமரைப்பாக்கம், வால்பாறை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com