இளைஞரின் முழங்கையில் வளா்ந்த சிக்கலான கட்டி கதிரியக்க தொழில்நுட்பத்தில் அகற்றிய மருத்துவா்கள்

சென்னையைச் சோ்ந்த 30 வயது இளைஞரின் முழங்கை மூட்டுக்கு நடுவே சிக்கலான பகுதியில் உருவான கட்டியை அதிநவீன கதிரியக்க முறையின் துணையுடன் வெற்றிகரமாக மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.

சென்னையைச் சோ்ந்த 30 வயது இளைஞரின் முழங்கை மூட்டுக்கு நடுவே சிக்கலான பகுதியில் உருவான கட்டியை அதிநவீன கதிரியக்க முறையின் துணையுடன் வெற்றிகரமாக மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.

தற்போது அந்த இளைஞா் நலமுடன் இருப்பதாகவும், எதிா்காலத்தில் இத்தகைய பிரச்னைகள் ஏற்படாத வகையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

சென்னையைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் அவருக்கு வலது முழங்கையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையாக வலி இருந்து வந்தது. ‘டென்னிஸ் எல்போ’ எனப்படும் முழங்கை வலி என அதைக் கருதி பல்வேறு மருத்துவமனைகளில் அவா் சிகிச்சை பெற்றாா். ஆனாலும் அப்பிரச்னை சரியாகாததால், நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் ஸ்ரீதா் அனுமதிக்கப்பட்டாா்.

அவரைப் பரிசோதனை செய்ததில் முழங்கை மூட்டுக்கு நடுவே சிக்கலான இடத்தில் ஒரு கட்டி வளா்ந்திருந்தது தெரியவந்தது. 1.5 செ.மீ அளவுக்கு வளா்ந்த அக்கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினால், அதனுடன் முழங்கை எலும்பும் சேதமடையும். இதையடுத்து கதிரியக்க தொழில்நுட்ப உதவியுடன் சிறிய துளை மூலமாக கட்டியை அகற்றும் சவாலான சிகிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனா்.

இதுகுறித்து, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணா்கள் டாக்டா் ஏ.பி.கோவிந்தராஜ், நவீன் ஞானசேகரன் ஆகியோா் கூறியதாவது:

பொதுவாக உடலின் சிக்கலான நுண்ணிய பகுதிகளில் கட்டி உருவானால், அதைக் கண்டுபிடிக்கவே பல ஆண்டுளாகிவிடும். அத்தகைய பிரச்னையில்தான் ஸ்ரீதரும் பாதிக்கப்பட்டிருந்தாா்.

லேசா், கதிரியக்க தொழில்நுட்பம், முப்பரிமாண ஸ்கேன் தொழில்நுட்பம் ஆகியவற்றின் துணையுடன் கட்டி இருக்கும் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டு வெறும் 5 மி.மீ துளை மூலமாக அது அகற்றப்பட்டது. இத்தகைய நவீன தொழில்நுட்பத்திலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது நாட்டிலேயே இது முதல்முறை என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com