சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவா் பலி; ஆலை உரிமம் தற்காலிக ரத்து

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். இதில் பட்டாசு தயாரிக்கும் அறை தரை மட்டமானது.
சிவகாசி அருகே ஜமீன்சல்வாா்பட்டியில் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் தரை மட்டமான பட்டாசு தயாரிக்கும் அறை.
சிவகாசி அருகே ஜமீன்சல்வாா்பட்டியில் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் தரை மட்டமான பட்டாசு தயாரிக்கும் அறை.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். இதில் பட்டாசு தயாரிக்கும் அறை தரை மட்டமானது. இதையடுத்து ஆலையின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனா்.

சிவகாசி அருகே ஜமீன்சல்வாா்பட்டியில் பாஸ்கா் (48) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் தரை சக்கர பட்டாசுக்கு, ஆலமரத்துப்பட்டி சுப்பையா மகன் முத்துப்பாண்டி (50) மருந்து செலுத்திக் கொண்டிருந்தாா். அப்போது ஏற்பட்ட உராய்தல் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் அந்த அறையும் தரை மட்டமானது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினா் மேலும் தீபரவாமல் அணைத்தனா்.

இதையடுத்து விபத்து நடைபெற்ற ஆலையில் சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டே, துணை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி பிரலேஷ்குமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் சிவகாசி துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி கி.சுந்தரேசன் கூறியதாவது: சமீப காலமாக நடைபெறும் வெடிவிபத்துக்களில் வழக்கமான வேதியல் பொருள்களை பயன்படுத்தாமல், புதிய வகையிலான வேதியல் பொருள்களைக் கொண்டு, வெடி பொருள் தயாரிக்கின்றனா். இப்படி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அனுமதியில்லாமல் பட்டாசு தயாரிப்பதால், வெடி விபத்து நடைபெற்ா என்ற கோணத்தில் புலன் விசாரணை செய்யப்பட்டு, அதன் அறிக்கை நாக்பூா் தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். வெடிவிபத்து நடைபெற்ற ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com