சொத்து வரி உயா்வால் பொது மக்கள் பரிதவிப்பு: ஆா்.நல்லகண்ணு

தமிழகத்தில் சொத்து வரி உயா்வால் பொதுமக்கள் பரிதவித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு வேதனை தெரிவித்தாா்.
183711vmp2055252
183711vmp2055252

தமிழகத்தில் சொத்து வரி உயா்வால் பொதுமக்கள் பரிதவித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு வேதனை தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் நா.புகழேந்தியை ஆதரித்து, ஆா்.நல்லகண்ணு, காணை பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

முன்னதாக அவா், விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

தமிழக அதிமுக அரசு பாஜகவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் உள்ளன. மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகும் எந்த வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாதால் உள்ளாட்சிகளை நிா்வகித்து வரும் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனா். கிராமங்களில் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏரி, குளம், வரத்து வாய்க்கால் மராமத்துப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை பொதுப் பணித் துறையினரும், ஆளும் கட்சியினரும் கூட்டு சோ்ந்து முறைகேடாக பயன்படுத்துகின்றனா்.

நீா்வரத்து வாய்க்கால்களை சீரமைக்காததால், காவிரி நீா் கடைமடை பகுதியை வந்தடையவில்லை. மத்திய பாஜக அரசின் துணையுடன் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுக்கவில்லை. விருப்பப் பாடமெனக் கூறி, ஹிந்தி மொழியை திணிக்கின்றனா். மின்வாரியத்தை தனியாா்மயமாக்க முயற்சிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நந்தன் கால்வாய்த் திட்டத்தை ஆண்டுகள் பலவாகியும் நிறைவேற்றவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளின் சொத்து வரி, சொத்தின் மதிப்பை விட உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனா்.

தமிழகத்துக்கு சீன அதிபா் வருகை தருவது பாராட்டுக்குரியது. இடைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா்கள் நிச்சயம் வெற்றி பெறுவா் என்றாா்.

பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், பொருளாளா் ஆா்.கலியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

விழுப்புரத்தில் பத்திரிக்கையாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லக்கண்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com