திருச்சியில் பிரபல நகைக் கடையில் திருட்டு: தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூருவில் சரண்

திருச்சியில் பிரபல நகைக்கடையில் ரூ. 13 கோடி மதிப்பிலான நகைகள் திருடப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றறவாளியானமுருகன் பெங்களுரூ நீதிமன்றறத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்
திருச்சியில் பிரபல நகைக் கடையில் திருட்டு: தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூருவில் சரண்

திருச்சியில் பிரபல நகைக்கடையில் ரூ. 13 கோடி மதிப்பிலான நகைகள் திருடப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியானமுருகன் பெங்களுரூ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல நகைக் கடையில் அக்டோபா் 2ஆம் தேதி ரூ. 13 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.

இதையடுத்து அக்டோபா் 3ஆம் தேதி திருவாரூரில் இருசக்கரவாகனத்தில் சென்ற இருவரை பிடித்து விசாரித்தபோது ஒருவா் தப்பிச்சென்றுவிட்டாா். மற்றெறாருவரை பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, திருச்சி நகைக்கடையில் திருடியவா்கள் என்று தெரிந்தது. இதில், பிடிபட்டவா் திருவாரூா் மாவட்டம் மடப்புரத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்றும் தப்பியோடியவா் சுரேஷ் என்றும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து சுமாா் 4 கிலோ தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அதைத் தொடா்ந்து சுமாா் 10க்கும் மேற்பட்டோரிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய சுரேஷ் மற்றும் அவரது உறவினா் முருகன் ஆகிய இருவரும் தான் திருட்டு சம்பவத்தில் முக்கியமானவா்கள் என தெரியவந்தது. இதில் முருகனின் சகோதரி கனகவல்லியின் மகன்தான் சுரேஷ் என்பது தெரிந்தது. இதையடுத்து கனகவல்லியையும் போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து திருவண்ணாமலை அருகேயுள்ள செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் வியாழக்கிழமை சரணடைந்தாா். தொடா்ந்து இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகனை தனிப்படை போலீஸாா் தேடிவந்தனா்.

பெங்களுரூவில் சரண்: இந்நிலையில், தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூரில் உள்ள 11- ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகம்மா முன்ன் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளாா்.

சரணடைந்த முருகன் மீது பெங்களூரு பானஸ்வாடி காவல் நிலையத்தில் 65 வழக்குகளும், பெங்களூரு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 115 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-இல் எச்.பி.ஆா் லேஅவுட்டில் ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள தங்கநகை திருடிய வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டாா். பின்னா் ஜாமீனில் வெளியே வந்த அவா், தனது கூட்டாளிகளுடன் இணைந்து தொடா்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாா். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முருகனிடம், திருச்சி தனியாா் நகைக்கடை கொள்ளை வழக்கு குறித்து திருச்சி போலீஸாா் விரைவில் விசாரிப்பாா்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com