கோபியில் பலத்த மழை: விளைநிலங்களில் வெள்ளநீர்

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் தடப்பள்ளி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில்

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் தடப்பள்ளி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பயிர்கள் சேதமடைந்துள்ளன. பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலிலும் வெள்ளநீர் புகுந்தது.
 ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் நகராட்சியின் மையப் பகுதியில் செல்லும் கீரிப்பள்ளம் ஓடை, தடப்பள்ளி வாய்க்கால் ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தடப்பள்ளி பாசன வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளம் கரைகளைத் தாண்டி வயல்களில் வெள்ளநீர் புகுந்தது. நடவு முடிந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் வெள்ளநீரால் சேதமடைந்தன.
 இதேபோல் கோபிசெட்டிபாளையம், பாரியூரில் உள்ள பிரசித்திபெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயிலுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com