டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரிய மனு: பரிசீலிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரிய மனுவினை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையத்திற்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

மதுரை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரிய மனுவினை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையத்திற்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)  பல்வேறு நிலைத் தேர்வுகளை நடத்துகிறது. அதில், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 2 தேர்வில் வெற்றி பெற மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வில் பங்குபெற பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். நீங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

இந்த நிலையில், குரூப் 2 தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் அண்மையில் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து இந்தாண்டு நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு முறையில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி, முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள தாகத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரிய மனுவினை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையத்திற்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி மதுரையைச்சேர்ந்த அப்பாஸ் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்த போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com