வடகிழக்குப் பருவ மழையை வரவேற்போம்: கையில் எப்போதும் குடை இருக்கட்டும்!

வடகிழக்குப் பருவ மழையை வரவேற்கத் தயாராவோம், கையில் எப்போதும் குடை வைத்திருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவ மழை
வடகிழக்குப் பருவ மழை


சென்னை: வடகிழக்குப் பருவ மழையை வரவேற்கத் தயாராவோம், கையில் எப்போதும் குடை வைத்திருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, வடகிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்க உள்ளது. அதனை வரவேற்வோம். எப்போது வெளியே சென்றாலும் கையில் குடை வைத்திருக்க வேண்டிய நேரம் இது. சுளீர் என்று வெயில் அடிக்கும், திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மழை பெய்யும் நாட்களாக அடுத்து வரும் நாட்கள் அமையக் கூடும்.

தமிழகத்துக்கு மிகச் சிறந்த வடகிழக்குப் பருவ மழை காத்திருக்கிறது. நமக்கு இந்த அக்டோபர் மாதத்தில் இயல்பான அளவில் அல்லது அதிகளவில் மழை கிடைக்க வாய்ப்புள்ளது. கணிக்க முடியாத நவம்பர் மற்றும் இயல்பான டிசம்பர் மாதங்களும் காத்திருக்கின்றன.

வடகிழக்குப் பருவ மழைக்கான சாதகமான சூழலைப் பார்க்கும் போது 1996ம் ஆண்டை நினைவுபடுத்துகிறது. அப்போதும், ஒரு மேகக் கூட்டத்துக்குப் பின்னால் மற்றொரு மேகக் கூட்டம் வரும். ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு முறை நான் வானத்தை பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது திடீரென ஒரு  மேகக் கூட்டம் வந்து 15-20 நிமிடத்துக்கு மழை பெய்யும். தற்போதும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கிறது.

கிழக்கு திசையில் இருந்து வரும் மேகக் கூட்டங்கள் காரணமாக, கடற்கரையோர மாவட்டங்களில் சிறு சிறு இடைவெளியில் மிதமானது முதல் பலத்த மழை அவ்வப்போது பெய்யும். அதே சமயம், அங்கொன்றும், இங்கொன்றுமாக திடீரென சூப்பர் டூப்பர் மழைகளும் பெய்யும். இந்த விஷயம் இன்று முதலே ஆரம்பிக்கும். இது அனைத்து கடற்கரையோர பகுதிகளுக்கும் அதாவது சென்னை முதல் தூத்துக்குடி வரை பொருந்தும்.

சென்னை மற்றும் இதர கடற்கரையோர மாவட்டங்கள்

சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான கடற்கரையோர மாவட்டங்களில் பகல் நேரத்தில் திடீர் திடீரென மழை பெய்யும். சில நாட்களில் இரவு நேரத்தில் தொடங்கி காலை வரை மழை நீடிக்கும். 

உள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு மிகச் சிறப்பான நாட்கள் காத்திருக்கின்றன.

தமிழகத்தின் உள் மாவட்டங்களான கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாப்பு உள்து. இப்பகுதிகளில் இரவு நேரத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

குன்னூர், கொடைக்கானல், ஊட்டி பகுதிகளில் இனி தினமும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் வரை உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் தினமும் மழைக்கு வாய்ப்பு உண்டு. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிவிட்டால் கடற்கரையோர மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு மாறிவிடும். 

தென் மேற்குப் பருவ மழை வேறு ஒரு வகையில் இருக்கும். வடகிழக்குப் பருவ மழையின் மாடலே வேறு மாதிரி இருக்கும். இரண்டுமே வேறு வேறு. அக்டோபர் மாதத்தில் பெங்களூருவில் மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com