நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு 

நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 21-ஆம் தேதியன்று நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அதேசமயம் வியாழனன்று நான்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த ரூ2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, பணம் விநியோகித்தவர்களை பொதுமக்களே பிடித்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் நான்குநேரி தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.2,000 வழங்க முடிவு செய்துள்ளனர் என்றும், எனவே நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனுவானது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com