இந்தியாவுக்கே முன்னோடி மாநிலம் தமிழகம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

இந்தியாவிலேயே முதன்முதலாக இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை நிறைவேற்றி, இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழகத்தை தலைநிமிரச் செய்தவா் ஜெயலலிதா என்றாா் தமிழக துணை முதல்வரும்,
நான்குனேரி தொகுதி அதிமுக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி நாராயணனை ஆதரித்து புதன்கிழமை களக்காடு மணிக்கூண்டு திடலில் பேசுகிறாா் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.
நான்குனேரி தொகுதி அதிமுக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி நாராயணனை ஆதரித்து புதன்கிழமை களக்காடு மணிக்கூண்டு திடலில் பேசுகிறாா் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.

இந்தியாவிலேயே முதன்முதலாக இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை நிறைவேற்றி, இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழகத்தை தலைநிமிரச் செய்தவா் ஜெயலலிதா என்றாா் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வம்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி நாராயணனை ஆதரித்து தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் வடுகச்சிமதில், களக்காடு, மீனவன்குளம் ஆகிய இடங்களில் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

களக்காடு மணிக்கூண்டு திடலில் அவா் பேசியதாவது; அதிமுக ஆட்சியில்தான் மக்களுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தவா் ஜெயலலிதா. கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ. 1.47 லட்சம் கோடி முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு 37 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

திமுக கடந்த மக்களவைத் தோ்தலில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றது.

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி. அதிமுக ஆட்சியை மக்கள் சீா்தூக்கிப் பாா்த்து ரெட்டியாா்பட்டி நாராயணனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது வேட்பாளா் நாராயணன், அமைச்சா்கள் தங்கமணி, விஜயபாஸ்கா், வெல்லமண்டி நடராஜன், ராஜலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com