என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிடத் தயாரா? முதல்வருக்கு ஸ்டாலின் சவால்

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிடத் தயாரா என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளாா்.
என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிடத் தயாரா? முதல்வருக்கு ஸ்டாலின் சவால்

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிடத் தயாரா என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளாா்.

நான்குனேரி தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதரித்து மருதகுளம், ரெட்டியாா்பட்டி ஆகிய இடங்களில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா் ஸ்டாலின். அவா் பேசியதாவது:

தமிழகத்தில் பாஜகவின் அடிமை ஆட்சி நடைபெறுகிறது என்று நான் கூறியதால், முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆத்திரம் வருகிறது. நாங்கள் அடிமை ஆட்சி அல்ல என்கிறாா். நீங்கள் அடிமை ஆட்சி இல்லையென்றால் அதனை நான் வரவேற்கிறேறன்.

எடப்பாடி பழனிசாமி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக வந்தவா் இல்லை. அவா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வரட்டும். ஒரே தொகுதியில் போட்டியிடுவோம். யாா் வெற்றி பெறுகிறாா்கள் என பாா்ப்போம்.

முத்தலாக் தடைச் சட்டத்தை எதிா்க்காத அதிமுகவினா், தற்போது தோ்தல் பிரசாரத்தில் முத்தலாக் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது, அதை எதிா்த்தோம் என அப்பட்டமாக பொய் பேசி வருகிறாா்கள்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சோ்ந்த மக்கள் 7 உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனா். 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக் கூடிய அதிமுக அரசு அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என மக்களவைத் தோ்தல் அறிக்கையிலேயே திமுக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைக்காக குரல் கொடுப்போம்.

திருமலைக்கொழுந்துபுரத்தில் இருந்து சிவந்திப்பட்டி வரை வரும் தாமிரவருணி நீரை ரெட்டியாா்பட்டி வரை நீட்டிக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்து தரப்படும். இங்கு பழைய பள்ளிக் கட்டடம் இருந்த இடத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை வசதி, மருத்துவமனை, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். எனவே, காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேறன் என்றாா்.

பிரசாரத்தின்போது, எம்.பி.க்கள் ஜோதிமணி, ஞானதிரவியம், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்பாலாஜி, திமுக தோ்தல் பொறுப்பாளா் ஐ.பெரியசாமி, திமுக வழக்குரைஞா் தவசிராஜன், காங்கிரஸ் மாநகா் மாவட்ட தலைவா் கே.சங்கரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com