இன்றும் நாளையும் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இன்றும் நாளையும் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, தற்போது கன்னியாகுமரியில் மிகக் கன மழை பெய்து வருகிறது. அதேப்போல தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களும் இன்று பரவலாக மழையைப் பெறும். தமிழகத்தில் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வானிலையில் வேகமாக உருவாகும் மேகச் சுழற்சியால் ராமநாதபுரம் முதல் சென்னை வரை கடற்கரையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்யும்.

எனவே, சென்னை முதல் தூத்துக்குடி வரை இன்று பகல் நேரங்களில் மழை பெய்வதைப் பார்க்க முடியும். சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும் நிலை இருப்பதால், வெளியே செல்பவர்கள், ரெயின் கோட் அல்லது குடையை நிச்சயம் கொண்டு செல்வது நல்லது.

அதே சமயம் இவ்விரு நாட்களில்இரவு அல்லது காலை நேரத்தில் மிகக் கன மழையாகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழையின் அளவு..

கன்னியாகுமரியின் குழித்துறை - 14 செ.மீ.
கோவையின் பெரியநாயக்கன்பாளையம் - 12 செ.மீ.
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலாடி - 6 செ.மீ.
நீலகிரியின் கெட்டியில் 6 செ.மீ.

சென்னையில்
மீனம்பாக்கம், ஆலந்தூரில் 6 செ.மீ.
கேளம்பாக்கம், மாமல்லபுரம், கேகே நகர், கோலப்பாக்கம், நுங்கம்பாக்கம் - 4 செ.மீ.

கேரளாவிலும் இவ்விரு தினங்களும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com