குடிமராமத்து பணி குறித்து வெள்ளை அறிக்கை தேவை

குடிமராமத்து பணி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட்

தஞ்சாவூர்: குடிமராமத்து பணி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பயிலரங்கு நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தரசன் அளித்த பேட்டி: டெல்டா பகுதியில் குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கியதாக முதல்வர் கூறினார்.

இத்தொகை எந்தப் பணிகளுக்குச் செலவிடப்பட்டது என ஏரி வாரியாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறவில்லை. பயிர்க் காப்பீடு பணம் கிடைக்காதவாறு கடனுக்கான கணக்கில் வரவு வைப்பதைக் கைவிட வேண்டும்.

இதை எதிர்த்து, தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் விவசாய சங்கம் சார்பில் அக். 23- இல் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. வேலையின்மை, விலைவாசி உயர்வைக் கண்டித்து ஜன. 8}இல் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த உள்ளன என்றார் முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com