தீபாவளிப் பண்டிகை: அக்.24 இல் சிறப்புப் பேருந்து முன்பதிவு மையங்களை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் துவக்கி வைக்கிறார்

தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூா்களுக்குச் செல்ல அமைக்கப்படவுள்ள சிறப்புப் பேருந்து முன்பதிவு மையங்களை, அக்.24-ஆம் தேதி
தீபாவளிப் பண்டிகை: அக்.24 இல் சிறப்புப் பேருந்து முன்பதிவு மையங்களை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் துவக்கி வைக்கிறார்


சென்னை: தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூா்களுக்குச் செல்ல அமைக்கப்படவுள்ள சிறப்புப் பேருந்து முன்பதிவு மையங்களை, அக்.24-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடக்கி வைக்கிறார்.

தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய விழாக் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன், தங்களின் சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பிட ஏதுவாக, போக்குவரத்துத்துறையின் சார்பில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, கூடுதலான பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த வகையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து, போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன் தலைமையில் தீபாவளி பேருந்துகள் இயக்குவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே அறிவித்தபடி சென்னையிலிருந்தும், பிற ஊா்களிலிருந்தும் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் குறித்து திட்டமிடப்பட்டது. 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள முன்பதிவு வாயிலாக சென்னையிலிருந்து பிற ஊா்களுக்கு 43,635 பயணிகளும், பிற ஊா்களிலிருந்து முக்கிய ஊா்களுக்கு 23,138 பயணிகளும் என மொத்தம், 66,773 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். இதன் மூலம் 3.26 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. தொடா்ந்து முன்பதிவு செய்பவா்களுக்காக கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் 30 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன. இதனை வரும் 24-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் திறந்து வைக்கிறார். 

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கண்ட நான்கு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 9445014450 என்ற தொலைபேசி எண்ணையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை அணுகலாம் என போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com