தங்கம் விலை பவுன் ரூ. 29,256

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.29,256-க்கு விற்பனை செய்யப்பட்டது. 


சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.29,256-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  வரலாறு காணாத வகையில், பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலையில் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. 
இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.29,256-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து, ரூ.3,657-க்கு விற்பனையானது. அதேநேரத்தில் வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.  வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.49.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.49,400 ஆகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com