தொடர் மழை: டாப்சிலிப்பில்  யானை சவாரி நிறுத்தம்

பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் தொடர் மழை காரணமாக யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் தொடர் மழை காரணமாக யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்குள்ள வனத் துறையால் 25 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
டாப்சிலிப் யானைகள் முகாமில் நன்கு உடல்வாகு கொண்ட ஆண் யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு கும்கியாகவும், சில ஆண் யானைகள் மற்றும் பெண் யானைகள் சுற்றுலாப் பயணிகள் சவாரிக்கும், வனப் பகுதி மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டாப்சிலிப் யானை சவாரி சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. வனப் பகுதிக்குள் 20 நிமிடம் யானை மீது அமர்ந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சில நேரங்களில் மான்கள், காட்டு மாடுகள் ஆகியவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. 
வாரத்தின் அனைத்து நாள்களிலும் பகல் நேரத்தில் யானை சவாரி செய்ய முடியும். ஆனால், மழைக் காலங்களில்  யானை சவாரி நிறுத்தப்படும். டாப்சிலிப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்காலிகமாக யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு யானை சவாரி மீண்டும் துவங்கும் என டாப்சிலிப் வனச் சரக அலுவலர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com