வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் குளிக்க மீண்டும்  தடை

சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.


சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
 தேனி மாவட்டம்,  கம்பம் அருகே உள்ள சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை வனப்பகுதிகளில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
 திங்கள்கிழமை அருவிக்கு வந்த வனத்துறையினர், வெள்ளப்பெருக்கை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அருவியில் குளிக்கத் தடை விதித்தனர். அருவியை பார்வையிட மட்டும் அனுமதித்து, வெள்ளப்பெருக்கை கண்காணித்து வருகின்றனர். 
   முன்னதாக கடந்த வியாழக்கிழமை இரவு பெய்த மழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு  வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை விதித்த வனத்துறையினர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளைக்  குளிக்க அனுமதித்தனர்.
  இந்நிலையில், தற்போது திங்கள்கிழமை மீண்டும் தடை விதித்ததால், அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com