Enable Javscript for better performance
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    By DIN  |   Published On : 24th October 2019 01:28 AM  |   Last Updated : 24th October 2019 01:28 AM  |  அ+அ அ-  |  

    karur

    கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோவைக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்தை கொடியசைத்து  தொடக்கி வைக்கிறார்  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.


    தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    கரூர் பேருந்துநிலையத்தில் 10 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளின் இயக்கத்தை புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
    சென்னையில் முதல்வரால் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் சேவை தொடக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 8 அரசு  போக்குவரத்துக் கழகங்களிலும் குறைந்த தொலைவு குளிர்சாதன வசதிகொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கும்பகோணம் கோட்டத்தில் 10 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    தற்போது கரூரில் இருந்து மேலும் 4 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் சேவை புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கரூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், கோவை ஆகிய வழித்தடங்களில் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
    போக்குவரத்துக் கழகத்தை நவீனமயமாக்கும் நோக்கில் புதிதாக 5,000 பேருந்துகள் வாங்கப்பட்டன. தற்போது முதல்வர், 2, 000 புதிய பேருந்துகளை வாங்க உத்தரவிட்டுள்ளார்.  சென்னையில் வியாழக்கிழமை தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.  
    நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் போக்குவரத்துக் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.     
    ஆகவே, பொதுமக்கள் பண்டிகை காலங்களில் கூடுதல்  கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு  சம்மந்தப்பட்ட வாகனத்தை மடக்கிப் பிடித்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    தமிழக போக்குவரத்துத் துறை, பொதுமக்கள் பண்டிகை கால சிறப்பு பயணம் மேற்கொள்ளும் வகையில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றார்.
    ஆட்சியர் த. அன்பழகன், மாவட்ட எஸ்.பி., இரா.பாண்டியராஜன், கும்பகோணம் கோட்ட  மேலாண்மை இயக்குநர் பொன்முடி, கரூர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் க.குணசேகரன், கிளை மேலாளர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp