கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி!

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,612 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் பிரவீணா 620 வாக்குகளைப் பெற்றார்.

இதன்மூலம், காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திலேயே தேர்தல் இறுதி முடிவுகள் வெளியானது.

காமராஜ் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 35,009 வாக்காளர்களில் 24,310 பேர் வாக்களித்தனர். இது 69.44 சதவீதமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com