கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டம்:22 மாவட்டங்களில் விரைவில் தொடக்கம்

வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 22 மாவட்டங்களில் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில்
கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டம்:22 மாவட்டங்களில் விரைவில் தொடக்கம்


வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 22 மாவட்டங்களில் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் பசுவின் வயிற்றில் இருந்து  52 கிலோ நெகிழிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,  அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
கால்நடைகளுக்கான சிகிச்சையில் அதிநவீன முறைகளை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் கையாண்டு வருகிறது. நாளொன்று ஆடு, மாடு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில், பசுவின் வயிற்றில் இருந்து  52 கிலோ நெகிழிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி உள்ளனர். தற்போது, அந்தப் பசு நல்ல உடல்நிலையில் உள்ளது. நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாகும் கால்நடைகளுக்கு வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் 22 மாவட்டங்களில் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆம்புலன்ஸில் கால்நடைகளுக்கு எக்ஸ்ரே எடுக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவற்றை எளிதாக தூக்கும் வசதியும் ஆம்புலன்ஸில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆம்புலென்ஸ் சேவையைப் பெற 1962 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 
என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com