காவல்துறையைச் சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழக காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையைச் சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள்: மு.க. ஸ்டாலின்


தமிழக காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில்,  தமிழகத்தில் மட்டும் 1,613 கொலைகள் நடைபெற்று, இந்தியாவில் கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் 6-ஆவதாக தமிழ்நாடு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 
அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருப்பது  ஆதாரப்பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. அதிமுக ஆட்சியில், போலீஸ் கமிஷனை அமைப்பதற்கே உயர்நீதிமன்றம் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. காவல்துறையினருக்குப் போதிய வாகனங்கள் இல்லாத நிலையில் புலனாய்வுப் பணிகளிலோ, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான எவ்வித முயற்சிகளிலோ தமிழகக் காவல்துறையால் ஈடுபட முடியவில்லை. 
பொதுமக்களுக்குச் சட்டத்தின் ஆட்சியை வழங்க முடியாமல், நேர்மையான காவல்துறை அதிகாரிகள் கூட தத்தளித்து நிற்கிறார்கள் என்பது வேதனையானது.
இந்தக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைக்குப் பிறகாவது, தமிழக காவல் துறை சுதந்திரமாகச் செயல்படுவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com