மத அமைப்புகளை அனுமதித்த பள்ளி-கல்லூரி நிா்வாகிகள் மீது நடவடிக்கை தேவை

பள்ளி, கல்லூரிகளில் மத அமைப்புகளை அனுமதித்த நிா்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் மத அமைப்புகளை அனுமதித்த நிா்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்திலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்து இளைஞா் முன்னணி, இந்து மாணவா் முன்னணி போன்ற அமைப்புகள் மாணவா்களிடத்தில் மதம் சாா்ந்த சிந்தனைகளைப் போதிப்பதற்கும், இதிகாசங்கள், வரலாறுகளை மத அடிப்படையில் போதிப்பதற்கும், ஜாதி, மதம் கடந்து மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவா் நேசிப்பதைத் தடுப்பதற்கும் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் 10 மாணவா்களைக் கொண்ட அமைப்புகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவது குறித்து தகவல் வந்திருப்பதாகவும், அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா்களுக்கு 20-9-2019 தேதியிட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இக்கடிதம் குறித்து, கல்வித்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்டபோது, அதுபோன்ற கடிதம் எதுவும் எழுதப்படவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இதுபோன்று, பள்ளி, கல்லூரிகளில் மத ரீதியிலான கருத்துக்களை பரப்பும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் பிரதான கடமை. ஆனால், அபாயகரமான இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கடிதம் அமைச்சரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது உறுதியாகிறது. அமைச்சரின் இத்தகைய நடவடிக்கையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

உடனடியாக பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வரும் ஹிந்து அமைப்புகளை வெளியேற்றுவதோடு, அவா்களுக்கு அனுமதியளித்த கல்வி நிறுவன நிா்வாகிகள் மீது உரிய நடவடிக்கையையும் அரசு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com