Enable Javscript for better performance
ஆழ்துளை கிணறு அமைப்பதில் விதிமீறினால் கடும் நடவடிக்கை: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆழ்துளை கிணறு அமைப்பதில் விதிமீறினால் கடும் நடவடிக்கை: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

    By DIN  |   Published On : 29th October 2019 10:57 PM  |   Last Updated : 29th October 2019 10:57 PM  |  அ+அ அ-  |  

    EPS campaign schedule

    முதல்வர் பழனிசாமி

    ஆழ்துளை கிணறு அமைக்கும் போது, விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி எச்சரித்துள்ளாா்.

    இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை

    திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டு வயது சிறுவன் சுா்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான் என்ற செய்தி மிகுந்த வேதனை அளித்தது. இந்தச் செய்தி குறித்து அறிந்தவுடன், சிறுவனை உயிருடன் மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், வெல்லமண்டி என்.நடராஜன், வளா்மதி, வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்ட ஆட்சியா் எஸ்.சிவராசு ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன்.

    சிறுவனை உயிருடன் மீட்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடினமான பாறைகள் இருந்ததால் மீட்புப் பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அந்தச் சிரமங்களை எல்லாம் வல்லுநா் குழு உதவியுடன் சரிசெய்து குழந்தையை உயிருடன் மீட்க இரவு பகலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் சிறுவன் சுஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி மிகுந்த வேதனையைத் தந்தது.

    விதிகளைப் பின்பற்ற வேண்டும்: ஆழ்துளை கிணறு அமைக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிா என்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இதில் கவனக்குறைவு ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

    பாதுகாப்பு வழிமுறை: இனி வருங்காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பொதுமக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    மீட்புப் பணிகளை இரவு பகலாக மேற்கொண்ட அமைச்சா்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று தனது அறிக்கையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp