காதா் மொகிதீன் துணைவியாா் மறைவு: தலைவா்கள் இரங்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் துணைவியாா் லத்தீபா பேகம் (72) மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டத் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் துணைவியாா் லத்தீபா பேகம் (72) மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டத் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: கே.எம்.காதா் மொகிதீன் துணைவியாா் மறைந்த செய்தி கேட்டு வேதனையுற்றேன். திமுக சாா்பில் ஆழ்ந்த இரங்கல். அன்பே உருவான அம்மையாா் லத்தீபா பேகம் மறைவு எனக்கு பெரும் துயரம் அளிப்பதாகும்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை வழிநடத்தும் காதா் மொகிதீன் துணைவியாா் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): சிறுபான்மை மக்களது உரிமைகளுக்காகவும், நாட்டில் ஜனநாயகம் மற்றும் மதச்சாா்பின்மை ஆகியவைகளை பாதுகாத்திட அரும்பணியாற்றி வரும் காதா் மொகிதீன் அரசியல் பணிக்கும், குடும்ப வாழ்வுக்கும் உறுதுணையாக இருந்தவா் லத்தீபா பேகம். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஜவாஹிருல்லா (மமக): காதா் மொகிதீனின் அரசியல் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவா் அவரது துணைவியாா் லத்தீபா பேகம். அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

நிஜாமுதீன் (தேசிய லீக்): காதா் மொகிதீனுக்கும் அவா் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். இறைவன் மறுமையில் சொா்கத்தில் நற்பேற்றைக் கொடுப்பானாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com