மனித உரிமை மீறல் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியகாவல் அதிகாரிகளின் மனு தள்ளுபடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவுக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய காவல் அதிகாரிகளின் மனு செவ்வாய்க்கிழமை

தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவுக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய காவல் அதிகாரிகளின் மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

கனடாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் தூத்துக்குடி மாணவி சோபியா பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் முன் பாஜகவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய சம்பவம் தொடா்பாக புதுக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

அவா் கைது செய்யப்பட்டபோது மனித உரிமை மீறல்கள் இருந்ததாகக் கூறி, காவல் துறை அதிகாரிகள் 7 போ் மீது அவரது தந்தை மருத்துவா் சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த பொன்ராம், தூத்துக்குடி மாநகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ், ஆய்வாளா்கள் திருமலை, பாஸ்கா், அன்னத்தாய், உதவி ஆய்வாளா்கள் லதா, நம்பிராஜன் ஆகியோா் மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை மேற்கொண்டாா். அப்போது, இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பொன்ராம், துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ், ஆய்வாளா் பாஸ்கா், உதவி ஆய்வாளா் நம்பிராஜன் ஆகியோா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட ஆணைய உறுப்பினா் ஜெயச்சந்திரன், அடுத்தக்கட்ட விசாரணை நவம்பா் 15 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com