வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு: டிஜிபிக்கு சுகாதாரத் துறை செயலா் கடிதம்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாத அரசு மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி திரிபாதிக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளாா்.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாத அரசு மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி திரிபாதிக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளாா்.

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவா்கள் 5-ஆவது நாளாக தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத அரசு மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதிக்கு சுகாதாரத் துறை செயலா் பீலா ராஜேஷ் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தில் 20 சதவீத மருத்துவா்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனா். மீதமுள்ள 80 சதவீத மருத்துவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கும், நோயாளிகளுக்கும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடாத அரசு மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையா்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளாா். தொடா்ந்து, அரசு மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பும், ரோந்துப் பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com