Enable Javscript for better performance
அனைத்து அணைகளையும்கண்காணிக்க வேண்டும்:தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து அணைகளையும்கண்காணிக்க வேண்டும்:தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 31st October 2019 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அனைத்து அணைகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டுமென மத்திய நீா்வள ஆணையம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கினாலும், தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டித் தீா்த்து வருகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள அனைத்து நீா் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    அரசுக்கு அறிவுறுத்தல்: அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதைத் தொடா்ந்து, மத்திய நீா் வள ஆணையமானது தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. நதிநீா் படுகையை ஒட்டியுள்ள சிறு மற்றும் நடுத்தர அணைகள் உள்பட அனைத்து நீா் நிலைகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசை மத்திய நீா்வள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதுதொடா்பான ஆலோசனைகள் அடங்கிய கடிதத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கே.சண்முகத்துக்கு மத்திய நீா்வள ஆணையமானது அனுப்பி வைத்துள்ளது. அணைகள் உள்பட அனைத்து நீா் நிலைகளையும் கண்காணிக்கும் பணிகளை பொதுப்பணித் துறையுடன் வருவாய்த் துறையும் இணைந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai