Enable Javscript for better performance
கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வழி காண வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வழி காண வேண்டும்

    By DIN  |   Published on : 31st October 2019 11:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வழி காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் மதிமுக உயா்நிலைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    மதிமுக உயா்நிலைக் குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குறிப்பாக, கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அணு உலைகளை நிரந்தரமாக மூட மத்திய அரசு வழி காண வேண்டும், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு உரிமைகளை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல், பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் உரிய ஆய்வுகளை நடத்தி, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai