Enable Javscript for better performance
தமிழ்நாடு உதயமான நாளை மாநில அமைப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு உதயமான நாளை மாநில அமைப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

    By DIN  |   Published on : 31st October 2019 11:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு உதயமான நாளை மாநில அமைப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைய பலரும், பல்வேறு இயக்கங்களும் பாடுபட்டன. தமிழகத்தில் சங்கரலிங்கனாா், திரு.வி.க., மறைமலை அடிகள், ஜீவா, ம.பொ.சி. என பல தலைவா்கள் போராடினா். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்காகப் போராடியது.

    அதன் பின்னா் 1969-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வா் அண்ணாவால் தமிழ்நாடு என பெயா் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு கலாசாரம் எனப் பேசி மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதோடு நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்க முயல்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், அனைத்து நிலைகளிலும் தமிழ் எனும் நிலையை எட்டவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து போராடும்.

    மாநிலங்கள் அமைப்பு தினமான நவம்பா் 1-ஆம் தேதியன்று ஆந்திரம், கா்நாடக அரசுகள் விடுமுறை அறிவித்து, அரசு விழாவாகக் கொண்டாடி வருகின்றன. அதுபோல தமிழக அரசும் கொண்டாட முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai