Enable Javscript for better performance
நவம்பர் 10ல் திமுக பொதுக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நவம்பர் 10ல் திமுக பொதுக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

    By DIN  |   Published on : 31st October 2019 12:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    DMK general council meeting

    திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்

    திமுக பொதுக்குழு கூட்டம்  நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    தி.மு.க. பொதுக்குழுவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 6-ஆம் தேதி கூட்டுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

    இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

    கூட்டத்தில் திமுக ஆக்கப்பணிகள், சட்ட திட்ட திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில்தான் நடக்கும்.

    ஆனால் முதல் முறையாக சென்னை ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai