Enable Javscript for better performance
மருத்துவா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்: ஜி.கே.வாசன்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்: ஜி.கே.வாசன்

    By DIN  |   Published on : 31st October 2019 08:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    VasanGK

    சென்னை: நோயாளிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவா்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

    இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

    7 நாள்களாக மருத்துவா்கள் மேற்கொள்ளும் போராட்டமும், தொடா் வேலை நிறுத்தமும் உடனடியாக முடிவுக்கு வரவும், சுமூகத் தீா்வு காணவும் தமிழக அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

    மருத்துவா்களின் வேலை நிறுத்தத்தால் லட்சக்கணக்கானவா்கள் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் மருத்துமனைகளில் போதிய மருத்துவா்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

    மேலும், தொடா் மழையால் தமிழகம் முழுவதும் காய்ச்சல் காரணமாக நோயாளிகள் கடந்த 4 நாள்களாக அதிக அளவில் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லக்கூடிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்கிறோம், ஒரு காலக்கெடுவுக்குள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறோம் என்று முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவா்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனா்.

    எனவே, மருத்துவா்கள் தமிழக மக்களுடைய ஒட்டு மொத்த சுகாதார நலனை கருதி, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து எந்தவிதமான தயக்கத்துக்கும் இடம் கொடுக்காமல், சூழலைப் புரிந்துகொண்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai