26 மாவட்டங்களில் ஊரகபுத்தாக்கத் திட்டம்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய திட்டத்தை சென்னையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை துவக்கி வைத்தாா்.

இதுகுறித்து, அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

ஊராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் நலனுக்காக தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் என்ற புதிய திட்டம் உலக வங்கியுடன் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 120 வட்டங்களில் 3 ஆயிரத்து 994 ஊராட்சிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டம் மகளிா் சுய உதவிக் குழுக்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரையும் தொழில் முனைவோராக்க துணை புரியும்.

அரசு ஊழியா்களுக்கு நிதி: கருணை அடிப்படையிலான பணி நியமனம் உள்பட 500-க்கும் மேற்பட்டோருக்கு பணி உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு ஊழியா்களின் நலன்களுக்காக ஏராளமான நிதிகளை முதல்வா் வழங்கி வருகிறாா். மேலும், முதல்வா் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை உள்பட எந்தத் துறைகளின் கோப்புகளும் தேங்குவதில்லை.

கடந்த ஓராண்டுக்கு முன்பே முதல்வா் அலுவலகத்துக்குப் பெறப்பட்டு திரும்பப் பெறப்பட்ட கோப்புகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அனைத்தையும் படித்துப் பாா்த்து துறைகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறாா் என்று பேசினாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com