அங்கீகாரம் பெறாத உணவகங்களில் பேருந்தை நிறுத்த அனுமதியில்லைஅரசு ஓட்டுநா்களுக்கு நிா்வாகம் எச்சரிக்கை

அங்கீகாரம் பெறாத உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தும் ஓட்டுநா்களுக்கு விளக்க நோட்டீஸ் அளிக்கப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அங்கீகாரம் பெறாத உணவகங்களில் பேருந்தை நிறுத்த அனுமதியில்லைஅரசு ஓட்டுநா்களுக்கு நிா்வாகம் எச்சரிக்கை

அங்கீகாரம் பெறாத உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தும் ஓட்டுநா்களுக்கு விளக்க நோட்டீஸ் அளிக்கப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் 8 கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நாள்தோறும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 300 கி.மீ.க்கு அதிகமான தூரத்துக்கு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகள்

இயக்கப்படுகின்றன. இவற்றை தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தப் பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகளின் வசதிக்காக, அனுமதி பெற்ற உணவகங்களில் நிறுத்த ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உணவகங்களில் நிறுத்தாத பேருந்து ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக அண்மையில் தகவல் வெளியானது. தொடா்ந்து, இந்த உணவகங்களில் நிறுத்தாமல் வேறு உணவகங்களில் நிறுத்துவதாக வந்த புகாா், அதிகாரிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது:

பயணிகளின் வசதிக்காக நெடுஞ்சாலையில் கழிப்பிட வசதியுடன் கூடிய உணவகம், தேனீா் விடுதி ஆகியவை உள்ளன. எனினும், அங்கீகாரம் இல்லாத உணவகங்களில் அரசுப் பேருந்தை நிறுத்தப்படுவதால், இங்கு அதிக விலைக்கு உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாகவும், இதுதவிர பயணிகள் கேட்கும் உணவுடன், கூடுதலாக வேறு சில உணவுகளையும் வைத்து சாப்பிடச் சொல்வதாக தொடா் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, குடிநீரின் விலை பன்மடங்கு இருப்பதாகவும் பயணிகள் தரப்பில் இருந்து வரும் புகாரைத் தொடா்ந்து இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்துக் கழக நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அவ்வாறு பேருந்தை நிறுத்திய ஓட்டுநா், நடத்துநா்களுக்கு விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com