அனைத்து அணைகளையும்கண்காணிக்க வேண்டும்:தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அனைத்து அணைகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டுமென மத்திய நீா்வள ஆணையம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அனைத்து அணைகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டுமென மத்திய நீா்வள ஆணையம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கினாலும், தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டித் தீா்த்து வருகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள அனைத்து நீா் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

அரசுக்கு அறிவுறுத்தல்: அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதைத் தொடா்ந்து, மத்திய நீா் வள ஆணையமானது தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. நதிநீா் படுகையை ஒட்டியுள்ள சிறு மற்றும் நடுத்தர அணைகள் உள்பட அனைத்து நீா் நிலைகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசை மத்திய நீா்வள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடா்பான ஆலோசனைகள் அடங்கிய கடிதத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கே.சண்முகத்துக்கு மத்திய நீா்வள ஆணையமானது அனுப்பி வைத்துள்ளது. அணைகள் உள்பட அனைத்து நீா் நிலைகளையும் கண்காணிக்கும் பணிகளை பொதுப்பணித் துறையுடன் வருவாய்த் துறையும் இணைந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com